சகோதர பாசம்னா இதுதான்.. தம்பி வராம சாப்பிட மறுத்த நிஷா.. வார்ன் பண்ணி திட்டிய ரியோ! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் மூன்று பேர் மூன்று காதல் படம் ஓடுதுன்னா, இன்னொரு பக்கம் பாசமலர் பார்ட் 3 ஓடுது.

ஷிவானி நாராயணனும் பாலாவும் மத்தவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆக அண்ணன் தங்கச்சி ஆயுதத்தை யூஸ் பண்றாங்க என்கிற குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆனால், நிஜமாகவே அண்ணன் தங்கையாக வாழ்வது நிஷாவும் ரியோவும் தான்.

கண்ல தெரியணும்

உண்மையான அண்ணன் தங்கச்சி பாசம்னா கண்ல தெரியணும். ஆனால், ஷிவானி நாராயணன் கண்ல நல்லாவே ஜொள்ளு விடுறது தான் தெரியுது. பயில்வான் ஒரே நாளில் ஜெயிலுக்குப் போயிட்டு திரும்பி வந்ததும், ஏதோ பல வருஷம் பார்க்காத புருஷனை கட்டி அணைத்த மாதிரி ஷிவானி பண்ணதெல்லாம் பார்த்தாலே பத்திட்டு வருது என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

பாசமலர் பார்ட் 3

பிக் பாஸ் வீட்டில் நிஷாவும் ரியோவும் தான் பாசமலர்களாக உண்மையாக இருக்கின்றனர் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேவும் இவர்கள் பாசமலர்கள் தான். பாசத்தை கூட அளவாத்தான் காட்டணும் அதிகமா அழுது காட்டக் கூடாது என ரியோ சொல்லும் அட்வைஸ் நச்.

உஷார் படுத்தும் ரியோ

இங்க கொஞ்சம் பண்ணாலும், வெளியே பெருசாக்கிடுவாங்க, நீ உன்னை முதல்ல கன்ட்ரோல் பண்ணிட்டு, உனக்கான கேம் ஆடு நிஷா என ரியோ சூப்பரா நிஷாவை உஷார் படுத்தி வருகிறார். ஏன்னா, பாலா ஜெயிலுக்குப் போன நிலையில், மறுபடியும் குரூபிசம் பிரச்சனையை கிளப்புவான் என ரியோ நல்லாவே கணித்து விட்டார்.

தம்பி சாப்பிட்ட பிறகு

சாப்பாடு சாப்பிடும் போது கூட தன்னோட தம்பி வரட்டும், அவன் சாப்பிட்டதுக்கு அப்புறம் சாப்பிடலாம் என நிஷா செய்வதையும் கவனித்த ரியோ, பாசம் என்பது மனசுக்குள்ள இருக்கும், ஆனால், நிஷா பண்றது ரொம்பவே பெரிய தப்பு என அவரை விடாமல் திட்டி தீர்த்தார். உண்மையான சகோதர பாசத்தில் சண்டை இருக்கும் உள்ளுக்குள்ள விட்டுக் கொடுக்காத சந்தோஷமும் இருக்கும்.

அழுகைக்கு அர்த்தம் வேண்டும்

சும்மா தேவையில்லாமல் எதுக்குமே அழக் கூடாது. நாம அழறோம்னா அதுக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என நிஷாவுக்கு நல்லாவே புரியும் படி ரியோ எடுத்து சொன்ன சீன்கள் எல்லாம் நேற்றைய பாலா புராணத்தின் நடுவே கொஞ்சம் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

டைட்டில் வாங்கணும்ல

குரூபிசம்னு சொல்லி அசிங்கப்படுத்துறாங்க, விஜய் டிவி புராடக்ட்ஸ்னு சொல்லி கேவலப்படுத்தறாங்க, இதையெல்லாம் தாண்டி பிக் பாஸ் டைட்டில் வாங்கணுங்கிற குறி ரியோ ராஜ் மனதில் நல்லாவே இருக்கு.. ஒவ்வொரு கேமும், ஒவ்வொரு வார்த்தையும் நல்லா தெளிவா பார்த்து விடுறாரு.. தப்பா பேசிட கூடாது. தேவையில்லாமல் சண்டை போடக் கூடாது என ரியோ தன்னோட கேமை சூப்பராவே விளையாடுகிறார்.“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment