வட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தொடர் அச்சுறுத்தல்!! (படங்கள்)

‘வட பகுதியில் மீண்டும் தலைதூக்கும் இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்கள் எனக்கூறி தம்மை அடையாளப்படுத்தாத நபர்களினால் நடாத்தப்படும் களையெடுப்புக்களும், அவர்களினால் விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்களும்’

இலங்கையில் தொடரும் கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்து மக்கள் துன்பப்படும் இந்த சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினரும் போலிசாரும் வீதிக்கு வீதி கடமையில் இருக்கும் இச் சந்தர்ப்பத் திலும் அரச புலனாய்வாளர்களினதும் இராணுவத்தினரது கொலை மிரட்டல் அச்சுறுத்தல்
தொடர்ந்த வண்ணமாக உள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் படி 30வயது நிரம்பிய இளைஞரான ஸ்வின்சன் சந்துரு அவர்கள் விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வுக்கு செல்லாத உறுப்பினர்களையும் புனர்வாழ்வழிக்கப்பட்டு பின்னர் சமுகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும் இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் இனம் தெரியாத ஒட்டுக் குழக்களினாலும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களையும் இந்தியாவிற்கு தப்பி செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டிலும் ஏனைய பல வழிகளில் கடல் மார்க்கமாக பொருட்களை கடத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவினார்

என்ற குற்றச்சாட்டிலும் புலிகளை மீள்இயக்க வெளிநாட்டில் புலிகளின் செயல்திட்டங்களை முன்னெடுப்போரோடு சேர்ந்து இயங்குவதாக அவரை தேடி வருவோரால் சந்துரு அவர்களுக்கு விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தல் மட்டுமன்றி அவரது வீட்டாருக்கும் அவர் சார்ந்த தகவல்களை
வழங்கக் கோரி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தொரிவிக்கின்றன.

ஏற்கனவே இவ் விடயம் சார்ந்து மனித உரிமைகள் ஆணைக்குழவில் முறைப்பாடு செய்யப்பட்டது. அவர்களின் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் 2ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்குச் சென்ற இனம் தொரியாத நபர்களால் அவர்களது வீடு முற்றுகையிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டதுடன் ஸ்வின்சன் சந்துரு என்பவரது புகைப்படங்ளையும் அவர்கள் எடுத்துச் சென்றதாகவும்

அத்துடன் 8பவுன் தங்க நகைகளையும், 18000ரூபாய் பணத்தையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக இதய நோயால் பாதிக்கப்பட்ட திரு.ஸ்வின்சன் (தேடப்படும் நபரின்தந்தை) அவர்களிடம் எமது செய்தி பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வருகிறது இந்த இனம் தெரியாத நபர்கள் துவக்கை காட்டி வெளியில் சத்தம் கேட்கக் கூடாது என மிரட்டியதுடன் குடும்பத் தலைவரான ஸ்வின்சன் அவர்களின் நெற்றியில் துவக்கை வைத்தே இந்த கோர சம்பவத்தினை நடத்தியுள்ளனர் அவர்கள் போகும் போது எங்கு சென்றும் முறையிடக் கூடாது.

போலிசாருக்கோ அல்லது வேறு எங்காவது முறையிட்டாலும் அது நமக்கு தெரிய வரும் சந்தர்ப்பத்தில் விளைவுகள் பலமாக இருக்கும் என அச்சுறுத்தி எச்சரித்து சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்களினால் மக்கள் மிகவும் ஒரு அச்சநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள்
போராளிகள் அவர்களுக்கு உதவி செய்தோர் தமக்கு என்ன நடக்குமோ எனும் அச்சத்துடன் வாழ்வதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

Comments (0)
Add Comment