2020ஐ “உரித்தெடுத்த” போட்டோஷூட்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணி மட்டும்தான்!! (படங்கள்)

உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணியை மட்டும் போர்த்தி கொண்டு போட்டோ ஷூட் எடுத்தனர் ஒரு இளம் தம்பதி.. இந்த வருடம் எத்தனையோ சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்த தம்பதி ஏற்படுத்திய சர்ச்சைகள் இப்போது வரை தீரவில்லை என்பதே நிஜம்! கேரளாவை சேர்ந்தவர்கள் லட்சுமி, ரிஷி கார்த்திக்.. இவர்களுக்கு கொல்லத்தில் செப்டம்பர் மாதம் கல்யாணம் நடந்தது.. கார்த்திக் ஒரு தொலை தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.. லட்சுமி என்ஜினியரிங் படித்துள்ளார். இந்த ஜோடி ஒரு டீ எஸ்டேட்டில் போட்டோ ஷூ நடத்தியது.. அந்த தோட்டத்தில் வெறும் வெள்ளை துணியை போர்வையாக போர்த்தி கொண்டு, சிரித்தபடியே ஓடித்திரிகிறார் லட்சுமி.. அவரை துரத்திக் கொண்டே பிடிக்க முயல்கிறார் கார்த்திக்!

சர்ச்சை

இந்த போட்டோக்கள் அத்தனையும் சோஷியல் மீடியாவில் வெளியானது.. சர்ச்சையும், கண்டனமும் எழுந்தது.. இதென்ன இந்த போட்டோக்களை எல்லாம் உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.. ஆனால், இந்த தம்பதி நீக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டனர்.. எங்க வீட்டிலேயே இந்த போட்டோ ஷூட்டுக்கு ஒப்புக் கொண்டனர்.. பிறகென்ன?

ஆபாச படம்

நான் வெள்ளை கலர் போர்வைக்குள்ளே டிரஸ் போட்டிருந்தேன்.. ஹனிமூன் போகும்போது இப்படி ஒரு ஷூட் நடத்தினோம். என்னை ஆபாச படத்தில் நடிக்குமாறு நிறைய பேர் சொல்றாங்க.. எங்காவது போய் ரூம் போட வேண்டியதுதானே? என்று எல்லாரும் திட்டுகிறார்கள்.. என்ன சொன்னாலும் சரி, இந்த போட்டோவை நீக்க முடியாது” என்றார் லட்சுமி.

சேறும் சகதியும்

இந்த தம்பதியை பார்த்து அடுத்தடுத்த மேலும் சில ஜோடிக்கு இந்த போட்டோ ஷூட் வியாதி பிடித்துவிட்டது.. ஒரு ஜோடி சேற்றுக்குள்ளேயே முங்கி போட்டோ ஷூட் நடத்தியது.. அவங்க 2 பேருக்குமே உடம்பெல்லாம் சேறு.. சகதி! அதாவது கல்யாணத்தன்றுதான் முன்பெல்லாம் வீடியோ, போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.. இப்போது தலைகீழகிவிட்டது.. ப்ரீ வெட்டிங் வீடியோ, ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் என்று இதற்கு பெயர் வைக்கிறார்கள்.. அதிலும் எல்லை மீறும் கவர்ச்சியுடன் போட்டோக்கள் இருப்பதே வேதனையாக இருக்கிறது.

எங்க போயி முடியுமோ?

பொதுவாக, பெண்ணை பார்த்துவிட்டு போய்விட்டால், மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணின் போன் நம்பர் கூட தருவதை தவிர்ப்பார்கள்.. காரணம், ஆணை பற்றியோ, பெண்ணை பற்றியோ கல்யாணத்துக்கு முன்பே விசாரிக்க போய், ஏடாகூட விஷயங்கள் கேள்விப்பட்டு, பல கல்யாணங்கள் இதனால் தடைபட்டு போன துயரமும் நடந்துவிடக்கூடும் என்பதால்தான்.. ஆனால், இப்போ என்ன சொல்றது? இதெல்லாம் எங்கே போயி முடியுமோ? நவயுகமா? கலிகாலமா?

Comments (0)
Add Comment