உத்து பாருங்க.. யார்னு தெரியுதா.. எதுக்கும் ஒரு அளவில்லையா “செல்லம்”??.. வைரலாகும் “தகதக” வீடியோ !! (படங்கள்)

“தங்கத்தில் முகமெடுத்து” என்று நம்ம எம்ஜிஆர் பாடுவாரே.. அது நிஜமாகவே நடந்து விட்டது.. அப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. வரிச்சியூர் செல்வம்.. இவர் மதுரையைச் சேர்ந்தவர்.. வரிச்சியூர் என்பது அங்குள்ள ஒரு ஊர்.. பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் செல்வம்.. முன்னாள் திமுக நிர்வாகி ஆவார்.. இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இப்போது ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். இவரது உடம்பெல்லாம் தங்க நகை மின்னும்.. இதுதான் செல்வத்தின் டிரேட் மார்க்.. அதேபோல் விலை காஸ்ட்லி கார்களில் ரவுண்டு அடிப்பார்.. சொகுசு மற்றும் ஆடம்பர விடுதிகளுக்கு போய் வருவார்..அடிக்கடி இவரை பற்றின செய்திகள் சோஷியல் மீடியாவில் வலம்வலம் வந்து கொண்டே இருக்கும்.

சர்ச்சை

அந்த வகையில், சமீபத்தில் அத்திவரதரை காண பலர் நாள்கணக்கில் காத்திருக்க, விஐபி தரிசனத்தில் செல்வம் உள்ளே சென்று கும்பிட்டது சர்ச்சையானது.. அதற்கு இவர் விளக்கம் சொல்லும்போது, “இவ்ளோ பெரிய பிரச்சனை வரும்னு எனக்கு தெரியாது. நான் வெச்சிருக்கிற கார் 1 கோடி ரூபாய்.. லேன்ட் ஓனர்.. என்கிட்ட 7 கார் இருக்கு. நான் விவிஐபி இல்லையா? நான் இப்போ தாதா இல்லை, தாத்தா!

ரோல் மாடல்

நான் போட்டிருக்கிற நகை மொத்தம் 250 பவுன். இது போக, பைனான்ஸ் தனியா பண்றேன். வாரத்துல 3 நாள் வெளியூர், மீதி 4 நாள் சாயங்காலத்துல பேரன், பேத்திகளுடன் வாக்கிங் போவேன், ஷாப்பிங் காம்பிளக்ஸ் போவேன். சாப்பிடுவேன். எனக்கு ரோல் மாடல் யாருன்னு பார்த்தீங்கன்னா, இப்போ லண்டன்ல இருக்கார் இல்லே.. 9 ஆயிரம் கோடி ஏமாத்திட்டு.. அவர்தான் என் குரு. அவர் இப்படித்தாங்க வாழ்றாரு” என்று அதிர வைத்தவர்தான் வரிச்சியூர் செல்வம்.

விழிப்புணர்வு

வழக்கமாக, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றால், புதுவிதமான வீடியோக்களை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவது செல்வத்தின் பழக்கம்.. அந்த வகையில், இப்போதும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாஸ் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது அந்த வீடியோ.

Comments (0)
Add Comment