‘டுபாக்கூர்’ பாலாஜி மீது பாயும் வழக்கு.. ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும்.. ஜோ மைக்கெல் அதிரடி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் தான் பெற்ற பட்டங்கள் குறித்து பேசிய பாலாஜி, சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் பெஜன்ட் என்றார்.

அட்ஜெஸ்மென்ட்

அதோடு காம்ப்ரமைஸ் செய்தும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் தான் சனம் ஷெட்டி அந்த அழகிப்போட்டியில் பங்கேற்றார் என்றும் கூறினார் பாலாஜி. ஆனால் அது பின்னர்தான் தெரியவந்தது. இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எச்சரித்த கமல்

இந்த விவகாரம் குறித்து அலசிய கமல், பொறுப்புடன் பேச வேண்டும், எப்படி டுபாக்கூர் என்று சொல்லலாம் என கேட்டு பாலாஜி முருகதாஸை விளாசி தள்ளினார். அதோடு இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்தார்.

டுபாக்கூர் அழகிப்போட்டி

அப்போதே அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல், பாலாஜியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் தங்களின் அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப்போட்டி என்று கூறியது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுக்கனா லீகல் பிரச்சனையை அவர் சந்திப்பார் என்றார்.

பாலாஜி மீது வழக்கு

இந்நிலையில் இந்த அழகிப்போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பிரவீன், பிக்பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாக வழக்கறிஞர் மூலம் அறிவித்துள்ளார்.

ரூ. ஒரு கோடி நஷ்ட ஈடு

பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார் தெரிவித்துள்ளதாகவும் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment