முதல் முறையாக இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக கோப் குழு கூட்டம் நாளை!!

பொது நிறுவனங்கள் குழுவின் கூட்டத்தொடர் (கோப் ) நாளையதினம் முதன்முறையாக இணையத் தொழில் நுட்பத்தின் காணொளி ஊடாக நடத்துவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இணையவழி காணொளி ஊடாக நாளைய தினம் இக்கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகப் பாராளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, களனி கங்கையின் நீர் மாசுபாடு தொடர்பில் கோப் குழுவில் நாளை கலந்துரையாடவுள்ளதாக தெரி விக்கப்படுகிறது

இதன்போது, சுகாதாரம், கைத்தொழில் மற்றும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச் சகங்களின் செயலாளர்கள் காணொளி ஊடாக இணைந் துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment