சைலன்ட் கில்லர் நீங்க.. சிரிச்சே ஊசி போட்டுடுவீங்க.. ரம்யாவை கடுப்பேற்றிய ஜித்தன் ரமேஷ்.. ஆனால்? (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. டாஸ்க்கே பண்ணாமல் வெறும் வேடிக்கை பார்க்கும் ஆடியன்ஸாக இதுவரை இருந்து வந்த ஜித்தன் ரமேஷை, திடீரென கஸ்டமர் கேர் ஆபிசர் மாதிரி டிரெஸ் மாட்டிவிட்டு உட்கார வைத்ததும், அவருக்கு வியர்த்தே போய் விட்டது.

மேலும், ரம்யா பாண்டியன், ஒவ்வொரு விஷயமாக கொக்கிக் போட்டு ஜித்தனிடம் நல்லா வாயை பிடுங்க பிடுங்க சுவாரஸ்யம் கூடுகிறது.

ஒருவழியா

டாஸ்க் கிடைச்சுடுச்சு ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் ஒரே ஒரு முறை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குப் போனார். ஆனால், அதற்கு பிறகு அர்ச்சனாவின் வேல் கேங்கில் ஐக்கியம் ஆகி, ஜெயிலுக்குப் போவதை சூப்பராக தவிர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது கஸ்டமர் கேர் அதிகாரியாக பக்காவா மாறியுள்ளார்.

ஜித்தனுக்கு கால் போட்ட ஜித்தி

பிக் பாஸ் வீட்டில் ஜித்தனாக ரமேஷ் இருந்தால் ஜித்தியாக இருப்பது ரம்யா பாண்டியன் தான். ரமேஷுக்கு கால் போட்ட அவர், என்னை நாமினேட் பண்ணனும்னா என்ன ரீசன் சொல்வீங்க என ஆரம்பித்தார். நீங்க சைலன்ட் கில்லர், சிரிச்சுன்னே ஊசி போடுவீங்க என ஜித்தன் ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் அடித்து விட்டார்.

கடுப்பான ரம்யா

ஜித்தன் ரமேஷ் சொன்னதை கேட்டதும், கடுப்பான ரம்யா பாண்டியன், ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறிவிட்டு, பின்னர் மீண்டும் பொறுமையை கையாண்டு, ரமேஷுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என யோசித்து, நிஷாவை நாமினேட் பண்ணனும்னா என்ன சொல்லுவீங்க என்று கொக்கிப் போட்டு ஸ்கோர் பண்ணார்.

சொதப்பாத அண்ணா

ஜித்தன் ரமேஷுக்கு நிஷாவை சக போட்டியாளராக ரொம்பவே பிடிக்கும். கோபப்பட்டாலும், நிஷாவிடம் மட்டுமே செல்லக் கோபம் தான் படுவார். அதனை மனதில் வைத்துக் கொண்டு ரம்யா, ரமேஷை வாரிவிட என்ன சொல்வது என்றே தெரியாமல் ஜித்தன் முழித்தார். டிவியில் இதை பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனா அக்கா சொதப்பிடாத அண்ணா என சொல்லும் 3வது புரமோ வைரலாகி வருகிறது.“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment