வடக்கு மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று தென்பகுதி குறித்தும் இந்தியா அக்கறைகாட்டவேண்டும்- பிரதமர்!!

இந்தியா வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடனான பேச்சுவார்த்தையின் போது மகிந்த ராஜபக்ச இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தியா இலங்கையின் தென்பகுதியிலும் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா வடக்கிலும் மலையகத்திலும் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா இதற்கு சாதகமான பதிலை வழங்கும் என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment