எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவை கள் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் தனியார் பஸ் போக்குவரத்து சங்கங் களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் போது எதிர் வரும் திங்கட்கிழமை முதல் வழமையான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் பண்டுக சுர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பஸ் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அரச மற்றும் தனியரர் போக்குவரத்து சேவைகள் நேர அட்டவணைக்கு அமைவாக போக்கு வரத்தில் ஈடுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பஸ்களும் தனது சேவையில் ஈடுபடும் என எதிர்பார்ப் பதாக அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment