பாலாஜி ஃபிரண்ட் இல்லனு சொன்னீங்க.. இவ்ளோ நெருக்கம் காட்றீங்களேம்மா.. பாவம் ஷிவானி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தன்னுடைய ஃபிரண்ட் இல்லை என்று கூறிய ரம்யா பாண்டியன், அவருடன் க்ளோஸாக அமர்ந்து பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் நேரத்திற்கு ஏற்றதுபோல் ஒட்டி உறவாடுபவர் ரம்யா பாண்டியன்.

அதிலும் ஆரிக்கு யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களோ அவர்களுடன் ரொம்பவே நெருக்கம் காட்டுவார்.

ஏற்றிவிட்ட ரம்யா

அந்த வகையில் அனிதா, ரியோ இருவரும் ஆரியுடன் மல்லுக்கு நின்ற போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அவர்களை ஏற்றி விட்டார். இதே போல் பாலாஜி ஆரியுடன் சண்டை போட்ட போதும் அவருடன் டீமானார்.

அப்படி சொல்லாதீங்க..

ஆனால் ஆரி பாலாஜியை ரம்யாவின் ஃபிரண்ட் என்ற போது எனக்கு இந்த வீட்டில் யாரும் ஃபிரண்ட் இல்லை என்று கூறினார். இனிமேல் அப்படி சொல்லாதீங்க என்றும் எகிறினார். அடுத்து பிக்பாஸ் நாமினேஷனின் போது கேபியும் ரம்யா, ஆரியுடன் யாரெல்லாம் சண்டை போடுறாங்களோ அவர்ளோடு சேர்ந்து கொள்கிறார் என்றார்.

பட்டியலிட்ட கேபி

இதனை தொடர்ந்து அதுகுறித்து கேபியிடம் விளக்கம் கேட்டார் ரம்யா. அப்போது இதுவரை ரம்யா செய்த நரித்தனங்களை பட்டியலிட்ட கேபி, இப்போது பாலாஜி ஆரியுடன் சண்டை போடுவதால் அவருடன் நெருக்கமாக இருக்கிறாய் என்றார்.

பாலாஜியுடன் ஓவர் நெருக்கம்

அதனைக் கேட்டு அப்படியா பாலாஜியுடன் நான் க்ளோஸா இருப்பது போன்று தெரிகிறதா என ஆச்சரியமாக கேட்ட அவர், பாலாஜி தனக்கு ஃபிரண்ட் இல்லை என்றார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாலாஜியுடன் ஓவர் நெருக்கம் காட்டினார் ரம்யா.

ரொம்ப வருத்தம்

அதாவது டாஸ்க் முடிந்த பிறகு கார்டன் ஏரியாவில் சுவற்றுக்கு ஓரமாக அமர்ந்து பாலாஜியும் ஷிவானியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாலாஜி பாட்டு டாஸ்க்கில் கடைசி இடத்தை பிடித்ததற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்.

ஏறி இறங்குது..

இதனை பார்த்த ரம்யா சோகத்தில் அமர்ந்திருக்கும் பாலாஜியிடம் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அடுத்து ஃபிஸிக்கல் டாஸ்க் கொடுத்தால் என்ன செய்வது? ஒவ்வொரு முறையும் ஏறி இறங்குகிறது. எல்லாரும் விளையாடுவது போன்று தான் டாஸ்க் கொடுக்கிறார்கள்.

சந்தோஷமா இருங்க..

நீங்கள் கவலைப்படாதீங்க.. சந்தோஷமா இருங்க நாளு டாஸ்க் தான் முடிஞ்சுருக்கு என்று கூறினார் ரம்யா. அதனைக் கேட்ட பாலாஜி, முன்னாடி தொட்டதெல்லாம் கணக்கு பண்ணியிருக்காங்க அதனால் தான் நான் கடைசி இடத்திற்கு வந்து விட்டேன் என்று கவலைப்பட்டார்.

மரண கலாய்..

அதற்கு விடுங்க 4 டாஸ்க் தானே முடிஞ்சுருக்கு இன்னும் 4 டாஸ்க்காவது இருக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை பூஸ்ட் அப் செய்தார் ரம்யா. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஃபிரண்ட்டா இல்லாத போதே இவ்ளோ க்ளோஸா என பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment