இப்போலாம் டிவியை விட்டு எழுந்திரிக்குறதே இல்லை.. ஆனந்தக் கண்ணீர் விட்ட அம்மா.. நெகிழ்ந்த சோம்!! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவுக்கான டிக்கெட்டை வென்ற சோம சேகரை அவரது அம்மா கண்ணீர் மல்க பாராட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை முதல் ஃபினாலே வாரம் தொடங்க உள்ளது. இதற்காக கடந்த வாரம் 9 டாஸ்க்குகள் நடத்தப்பட்டன.

இந்த 9 டாஸ்க்கிலும் அதிக பாயிண்ட்ஸ்களை எடுக்கும் போட்டியாளர் நேரடியாக ஃபினாலே வாரத்திற்கு தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சோம சேகருக்கு ஃபினாலேவுக்கான டிக்கெட் வழங்கப்பட்டது.

ஜூம் காலில் கனேக்ட்டான அம்மா

இதனை முன்னிட்டு அவருக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் சக ஹவுஸ்மேட்ஸ் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களோடு சேர்ந்து சோம சேகரின் அம்மாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கமலுடன் ஜூம் காலில் கனெக்ட்டான அம்மாவை பார்த்து கண்ணீர்விட்டார் சோம்.

ஆனந்தக் கண்ணீர்தான்..

தொடர்ந்து பேசிய சோமுவின் அம்மா. நல்லா விளையாடுறப்பா. நீ வின் பண்ணதுல ரொம்ப சந்தோஷம் என்று கண்கள் கலங்கினார். இதனை பார்த்த சோம் அழாதீங்க அம்மா என்றார். அதற்கு நான் அழலப்பா, ஆனந்தக் கண்ணீர்தான் என்றார்.

98 நாட்கள் ஆகிவிட்டது

மேலும் நீ என்னை பார்த்து 98 நாட்கள் ஆகிவிட்டது சோம் என்ற அவர், எல்லோரையும் பார்க்க அழகா இருக்கு. இப்போலாம் அம்மா டிவியை விட்டு எழுந்திருப்பதே இல்லை. நீங்க எல்லோரும் போட்டி போட்டு பண்றது பிடிக்கிறது. கமல் சார் பேசுவது பிடிக்கிறது என்றார்.

பார்த்துக்கொண்டே இருந்தால்..

தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழகைமளில் நீங்கள் பேசுவது அவர்களின் முன்னேற்றத்துக்கானது என்றார். அதனை கேட்ட கமல் நன்றி அம்மா என நெகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் சோமிடம் பேசிய அவர், என்ன சோம் எப்படி இருக்கு என்றார். அதற்கு பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று இருக்கு சார் என்றார் சோம்.

இனிமே மாறும்..

தொடர்ந்து பேசிய சோமின் அம்மா, அவன் எவ்ளோ வேதனையில் இருக்கிறான் என்பது எனக்குதான் தெரியும். வெளியே காட்டிக்கொள்ள மாட்டான், இனிமே மாறும் என்று ஆதங்கப்பட்டார். அதற்கு பதில் கூறிய சோம், அதுக்கு நீங்கதான் அம்மா காரணம் என்றார்.

நல்ல நேரம் வரும்..

அதற்கு பதில் கூறிய அவரது அம்மா, எல்லாருடைய அன்பும் உன் பொறுமையும் தான் காரணம் என்றும் கூறினார். அம்ம பேசியதை கேட்டு கண்ணீர்விட்டார் சோம். தொடர்ந்து பேசிய அவரது அம்மா, நல்ல நேரம் வரும், சோமுக்காக ஓட்டு போட்டவங்களுக்கு நன்றி.. என்றார்.

கதவு பக்கத்தில் நின்று பார்க்கும்

பின்னர் தனது செல்ல நாயான குட்டு குறித்து கேட்டார் சோம், அதற்கு, உன்னை பற்றி பேசினால் உடனே கதவருகில் நின்று வெளியே பார்க்கும். நீ வரவில்லை என்றதும் மீண்டும் என்னிடமே வந்து விடும் என்றார். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் வாழ்த்து கூறினார் சோம்மின் அம்மா.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment