பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு டிஆர்பி கிங்காக இருக்கோ, அந்த அளவுக்கு அதன் மீதான விமர்சனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தொகுப்பாளர் கமல்ஹாசன் மீதே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கமல் சிலருக்கு மட்டுமே ஆதரவாக பேசுவதாக சில போட்டியாளர்களும், நெட்டிசன்களும் பல முறை குற்றம்சாட்டி உள்ளனர்.
மய்யமாக இல்லை
பிக் பாஸ் வீட்டில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் கமல், பாலாஜி முருகதாஸ் விஷயத்தில் அவரை தடவிக் கொடுத்து வருகிறார் என்றும், ஆரிக்கு அதிக ஓட்டுக்கள் வருவதால், அவரை ஒவ்வொரு வாரமும் பாராட்டுகிறார் என்றும் சில போட்டியாளர்களை கமலே குறைத்து மதிப்பிடுவது அவரது மய்யத்தின் மீதே கேள்வியை எழுப்புவதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
திட்டவே மாட்டுறாரு
சனிக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பேசிய கமல், தன் மீதும் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்று வெளிப்படையாக பேசினார். மற்ற மொழியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், இவர் திட்டவே மாட்டுறாரு என்றும் விமர்சிப்பதாக கூறினார்.
அது என் பாணியில்லை
பின்னர் அதற்கு விளக்கம் கொடுத்த கமல், ஒருவரை திட்டித் தான் திருத்த வேண்டும் என்பதில்லை. மேலும், திட்டுவதோ, திருத்துவதோ தனது பணியும் இல்லை, பாணியும் இல்லை. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கு அதில், எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்கிற சாய்ஸ் மட்டுமே நான் கொடுத்து வருகிறேன் என்றார்.
சுமார் ஸ்டூடன்ட்
படிப்பை விட்டு சினிமாவுக்குப் போகிறேன் என வீட்டில் சொல்லும் போது, ரெண்டு அடி கொடுத்து என் பெற்றோர்கள் என்னை படிக்க வைத்திருக்கலாம். சுமாரான மாணவனாக சினிமா பக்கமே வராமல் இருந்திருப்பேன். ஆனால், அப்போ அவங்க, எனக்கு தேர்வு செய்ய வாய்ப்பு கொடுத்தனர், அதனால் தான் இங்கே நிற்கிறேன். யாருக்கும் ஊட்டி விடக் கூடாது. போட்டியாளர்கள் அத்தனை பேரும் மெச்சூர் ஆனவர்கள். அவர்கள் பாதையை அவர்களே தான் தேர்வு செய்ய வேண்டும் என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் கமல்.
ரசிகர்கள் பாராட்டு
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கமல் போன்ற ஒரு மாபெரும் நடிகர் எல்லாம் கண்டு கொள்ளவே தேவையில்லை, அப்படியே கடந்து போனாலும் கவலையில்லை. ஆனால், அதிலும் சில விமர்சனங்களுக்கு தயங்காமல் பதில் சொன்ன கமல் சாரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். செடி, புத்தகம், திருக்குறள் செடி, புத்தகம், திருக்குறள் மேலும், கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாலே தமிழில் அதிகமாக பேச வேண்டும், செடி வளர்க்க வேண்டும், வாரம் ஒரு புத்தகத்தை பற்றிய விளக்கத்துடன் அதை பரிந்துரை செய்வது. திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்ட தமிழ் நூல்களை போட்டியாளர்களுக்கும் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களுக்கும் அறிமுகப்படுத்துதல் என ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.
அடுத்த சீசன்
தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருவதாலே பிக் பாஸ் நிகழ்ச்சியி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வார நாட்களை விட வார இறுதியில் கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குத் தான் டிஆர்பி அதிகளவில் எகிறும். அரசியல், சினிமா என பிசியாக இருந்தாலும் பிக் பாஸையும் விடாமல் இந்த கொரோனா காலத்திலும் 100 நாட்களை வெற்றிகரமாக கடக்கவுள்ளார். அடுத்த சீசனும் கமலே தொகுத்து வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss