வாவ்.பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று ரீஎன்ட்ரி ஆகியுள்ள 2 பிரபலங்கள்.கட்டியணைத்து கண்ணீர்விடும் பாலாஜி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தை முன்னிட்டு பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் ரேகா ஆகியோர் வந்தனர்

என்ட்ரியான சுச்சி

இவர்கள் வரும் வியாழக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சயின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் சுச்சி ஏற்கனவே என்ட்ரி கொடுத்து சோஃபாவில் அமர்ந்து பாலாஜியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

பாலாஜியுடன் நெருக்கம்

பாலாஜியின் இரண்டு தோழிகளும் ஒரே நாளில் என்ட்ரி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர். ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ள அர்ச்சனா, நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்று பாலாஜி ஆரியிடம் கோப்பட்டதை கூறி ஏற்றிவிட்டார்.

ஃபுல் மேக்கப்பில் சுச்சி

இந்நிலையில் இன்று ஃபுல் மேக்கப்பில் செம கலக்கலாய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் சுச்சி. வந்த வேகத்தில் பாலாஜியுடன் பேசி தீர்க்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக பிளேஸரில் என்ட்ரி கொடுக்கிறார் சம்யுக்தா.

கட்டியணைத்து கண்ணீர்

அவரை அன்போடு உள்ளே அழைத்து வருகிறார் ரம்யா பாண்டியன். சம்யுக்தாவை பார்த்ததும் கண்கள் கலங்கி ஐ மிஸ்டு யூ.. மிஸ்டு யூ என புலம்பி தீர்க்கிறார் பாலாஜி. இருவரும் மாறி மாறி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏத்திவிட்ட அர்ச்சனா

பாலாஜியின் இரண்டு தோழிகளும் ஒரே நாளில் என்ட்ரி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளனர். ஏற்கனவே என்ட்ரி கொடுத்துள்ள அர்ச்சனா, நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்று பாலாஜி ஆரியிடம் கோபப்பட்டதை கூறி ஏற்றிவிட்டார்.

என்ன ஆகப் போகிறதோ?

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள சம்யுக்தாவும் ஆரிக்கு ஆகாதவர்தான். இதனால் என்ன ஆகப்போகிறதோ? இவர் என்னவெல்லாம் சொல்லி பாலாஜியை ஏற்றிவிட்டு ரணகளமாக்க போகிறாரோ என இன்றும் பதற்றமடைந்துள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
Comments (0)
Add Comment