நேர்மையா விளையாடணும்னு என் மனைவிக்கிட்ட கூட எதையும் கேட்கல.. நிஷாவிடம் கண்ணீர்விட்ட ஆரி! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள நிஷாவிடம் ஆரி கண்ணீர்விட்டு தனது மனக்கவலைகளை கொட்டித் தீர்த்தது ரசிகர்களை கலங்க வைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைய உள்ளது. ஃபினாலே வாரமான இந்த கடைசி வாரத்தில் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

அந்த வகையில் முதற்கட்டமாக ஜித்தன் ரமேஷ், ரேகா, அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர்.

பேருக்கு ஒரு ஹக்..

அவர்களில் ரேகாவையும் நிஷாவையும் தவிர மற்ற யாரும் ஆரியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. பேருக்கு சின்னதாய் ஒரு ஹக் கொடுத்துவிட்டு சென்றனர். எல்லோரும் குரூப்பாய் கேலியும் கிண்டலுமாய் இருக்க ஆரி மட்டும் தனியாக நிஷாவிடம் அமர்ந்து தனது மனக்கவலைகளை கொட்டித் தீர்த்தார்.

அவன் தப்பா தெரியக்கூடாது

அப்போது பேசிய நிஷா, பாலாஜி திரும்ப திரும்ப புரியாம பண்றானேன்னு எனக்கே தோனுச்சு என்று ஆரியிடம் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து வருத்தப்பட்டார். அதற்கு பதில் கூறிய ஆரி, என்னை திட்றது பத்தியில்ல, அவன் வெளியே தப்பா தெரியக்கூடாதுன்னு பலமுறை சொன்னேன்.

கண்கள் கலங்கி ஸ்தம்பித்த ஆரி

அவன் கேட்கல. அவன் வயசுக்கு இதெல்லாம் தப்புன்னு தெரியல. சொல்லிக் கொடுக்க ஆள் இல்ல. இங்கே இருக்குற எல்லாரையுமே எனக்கு பிடிக்கும் என்ற ஆரி அடுத்த வார்த்தை பேச முடியாமல் கண்கள் கலங்கி ஸ்தம்பித்து போனார்.

உடைஞ்சு போயிடக் கூடாது

இதனை பார்த்த நிஷா, சகோதரா வேண்டாம் என்று அவரை ஆறுதல் படுத்தினார். மேலும் நான் உங்களுடன் உட்காந்து பேசுவதற்கான காரணமே நீங்கள் உடைஞ்சு போயிடக் கூடாது என்பதற்காகதான் என்றும் நிஷா கூறினார்.

பொறாமை பிடிச்சவன்னு சொல்லி

தொடர்ந்து பேசிய ஆரி, அவங்க பேசினது உள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சு. குறை சொல்லி, பொறாமை பிடிச்சவன்னு சொல்லி. ரெண்டு விஷயம்தான் பார்த்திருக்கிறாங்க. எல்லாரையும் நான் பாராட்டியிருக்கேன். எல்லா இடத்திலேயும் என்கரேஜ் பண்ணியிருக்கேன் என்று கண்ணீர் விட்டார்.

பொறாமை இல்லை

ஆனால் பொறாமையில செஞ்சேன் போட்டியில செஞ்சேன்னு சொல்றாங்க என்று மீண்டும் கலங்கினார். இதனைக் கேட்ட நிஷா, உங்களுடன் 70 நாட்கள் ட்ராவல் பண்ணியிருக்கேன். நீங்க இங்க பொறாமைப்பட்டு பார்த்ததில்லை என்று ஆரியை ஆறுதல் படுத்தினார்.

நேர்மையா விளையாட வேண்டும்

மீண்டும் பேசிய ஆரி என் மனைவிக்கிட்ட கூட வெளியே எப்படி இருக்குன்னு கேட்கல. அவரே சொல்ல வந்த போதும், என்கிட்ட எதையும் சொல்லாதே அதைக் கேட்டு நான் மத்தவங்க மைனஸை வச்சு விளையாடினா அது நேர்மையா இருக்காது. உள்ளே வரும்போது எப்படி வந்தேனோ அதே போலவே விளையாடிட்டு வெளியே வருகிறேன் என்று கூறினேன் என உணர்ச்சி பொங்க பேசினார் ஆரி.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

Comments (0)
Add Comment