‘தூய்மைப்படுத்துவோம் தூய்மையைப் பேணுவோம்’!!

மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின் தொடக்க புள்ளியாக நாளை (17.01.2021) காலை 7 மணியளவில் ஆரம்பமாகும்.

யாழ்.மாநகர சபை தூய்மைப்பணியாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறும்.

இதில் பங்கெடுக்க விரும்புகின்ற சமூக ஆர்வலர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் கன்னாதிட்டிச் சந்திக்கு அருகில் உள்ள மாநகர சபையின் பாசார் பிரட்டு மையத்தில் ஒன்று கூடவும்.

உரிய சுகாதார நடைமுறைகளுடன் குறித்த தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment