அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்! (படங்கள்)

தனது இளைய மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரீஎன்ட்ரி ஆன வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கன இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதாவுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் மூன்றாவது திருமணம் செய்தது பெரும் சர்ச்சையானது.

திருமணம் முறிவு

இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார் வனிதா. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணம் முறிந்தது. பீட்டர் பால் மதுவுக்கு அடிமையானதால் அவரை விட்டு பிரிவதாக வீடியோ வெளியிட்டு பிரேக்கப்பை உறுதிப்படுத்தினார் வனிதா.

இளைய மகள்..

இதனை தொடர்ந்து சமக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டார் வனிதா. தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ள வனிதா, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தனது இரண்டாவது மகளான ஜெனிதா பூப்பெய்திவிட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சேரன்

வனிதா தனது குடும்பத்தினருடன் எந்த ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் மூத்த மகளான ஜோவிகா பெரிய பெண் ஆனபோது பிக்பாஸ் மூலம் வனிதாவுக்கு பழக்கமான இயக்குநர் சேரன் மாமா ஸ்தானத்தில் இருந்து அனைத்து சடங்குகுளையும் செய்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விலை மதிப்பற்றவர்கள்

இந்நிலையில் தற்போது வனிதா விஜயகுமாரின் இளைய மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மகள்களுடன் தனியாக

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மகள் ஜெனிதாவை கடத்தி வந்ததாக அவரது முன்னாள் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வனிதாவிடம் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து விசாரித்தனர். பின்னர் தன்னை யாரும் கடத்தி வரவில்லை என்றும் முழு விருப்பத்துடன் தாயுடன் வந்ததாக ஜெனிதா வாக்குமூலம் அளித்தார். வனிதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment