பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்திருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி கிராண்ட் ஃபினாலேவை சந்திக்க உள்ளது.
இதனை முன்னிட்டு கடைசி வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அழைக்கவில்லை
இதில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத்தை தவிர மற்ற அனைவருமே என்ட்ரி கொடுத்துள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்திக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
முதல் புரமோ..
இதேபோல் அனிதா சம்பத்தின் அப்பா அண்மையில்தான் காலமானார். இதனால் அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது சந்தேகம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
சோகமே உருவாக..
மேக்கப் எதுவும் இல்லாமல் ரொம்ப சிம்பிளாகவும் சோகமே உருவாகவும் வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சென்று கட்டியணைத்து வரவேற்கின்றனர்.
அப்பாவாக இருப்போம்
ஒவ்வொருவரையும் கட்டியணைக்கும் அனிதா கண்ணீர் விட்டு கதறுகிறார். அவரை ஆறுதல் படுத்தும் ஹவுஸ்மேட்ஸ் நாங்கள் எல்லாம் இனி உனக்கு அப்பாவாக இருப்போம் என்று கூறி அவரை தேற்றுகின்றனர்.
ரசிகர்கள் ஆச்சரியம்
பின்னர் அழுதப்படியே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதாவுக்கு கைத்தட்டி வரவேற்பு கொடுக்கின்றனர். அனிதாவின் வரவால் பிக்பாஸ் வீடே சோகமாய் காட்சியளிக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளாரே அனிதா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss