நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு ! (வீடியோ, படங்கள்)

ரம்யா பாண்டியனுக்கு மட்டுமில்லை அவங்க அக்காவுக்கும் ஆரிபோபியா முத்திப் போயிடுச்சு என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். கலட்டா.காமுக்கு ரம்யா பாண்டியனின் அக்கா மற்றும் தம்பி கொடுத்து பேட்டி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

குடும்பமே இப்படி விஷமாக இருக்கு என நெட்டிசன்கள் ரம்யா அக்காவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

ஆரிபோபியா

கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியே முடிவடைய உள்ள நிலையிலும் ஆரிபோபியா மட்டும் பலருக்கும் போகாது என்றே தெரிகிறது. அதிலும் ரம்யா பாண்டியனின் அக்கா ஓவர் நக்கலாக பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அவரையும் டோட்டல் டேமேஜ் செய்து வருகிறது.

கமல் மீதே குற்றச்சாட்டு

இளையதளபதி விஜய் சொல்ற மாதிரி பாலிடிக்ஸ்ல கேம் விளையாடாதீங்க.. கேம் விளையாடுற இடத்துல பாலிட்டிக்ஸ் பண்ணிடாதீங்க என ரம்யா பாண்டியனின் அக்கா பேசியது கமல்ஹாசனை சாடும் விதமாக உள்ளது என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் பிரச்சாரத்துக்கு கமல் பயன்படுத்திகிறார் என்றும், ஆரிக்கு டைட்டில் போவது போலவே தேர்தலில் கமல் வெற்றிபெறுவார் என்பதன் உருவகமே இந்த பிக் பாஸ் ஷோ என்று கூறுகிறார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரம்யாவுக்கு வாய்ப்பு இல்லை பிக் பாஸ் வீட்டுக்கு வந்து ஆரி தான் என் தலைவன் என பேசிய ரம்யா பாண்டியனின் சகோதரரிடம் கேட்ட கேள்விக்கு, ரம்யா வெற்றி பெற 30 சதவீதம் தான் வெற்றி என்றார். பாக்கி 70 சதவீதம் யார்? என கேட்டதற்கு, ஆரி புரோதான் என ரம்யாவின் தம்பி அடக்கத்துடன் சொல்லும் போது, ரம்யாவின் அக்கா ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டி பேசினார் என நெட்டிசன்கள் வெளுத்து வருகின்றனர்.

ஆரியை வின் பண்ண வைக்க

தனது தம்பி பேசும் போது உடனே இடை மறித்துப் பேசிய ரம்யாவின் அக்கா உங்க கேள்வியே தப்பு.. கண்டிப்பா ஆரி புரோதான் ஜெயிப்பார். அவரை ஜெயிக்க வைப்பது போலத்தான் கடந்த 8 வாரத்துக்கு முன்னாடி இருந்தே யார் வின் பண்ணனும்ங்கற மாதிரியே கேம் போனது என பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும், விஜய் டிவி மீதும், அதை தொகுத்து வழங்கிய கமல் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

நெக்ஸ்ட் சிஎம்

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலும், ஆரி தான் நெக்ஸ்ட் சிஎம், நெக்ஸ்ட் கர்ணன்.. அப்புறம் வேற என்னடா என தம்பியையும் சேர்த்து கோர்த்து விட பார்த்தார். அவரது அந்த வீடியோவுக்கு கீழே ஏகப்பட்ட நெட்டிசன்கள், ரம்யாவையும், ரம்யா அக்காவையும் அவரது குடும்பத்தையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வேண்டாத பப்ளிசிட்டி

போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியில் என்ன பேசினாலும், எப்படி நடந்து கொண்டாலும், வெளியே வரும் போது, அவர் மறுபடியும் அவர்களாக மாறிவிடுவர். ஆனால், அவர்களது புகழ் வெளிச்சத்தில் தாங்களும் பிரபலம் ஆக வேண்டும் என நினைத்து இப்படி மற்றவர் பற்றி அவதூறாக பேசுவது வேண்டாத பப்ளிசிட்டி என்றே நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.Comments (0)
Add Comment