அதிரும் அமெரிக்கா – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.5 கோடியை கடந்தது..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.16 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை நெருங்குகிறது. 96 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments (0)
Add Comment