வவுனியா புளியங்குளம் முத்துமாரிநகர்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் கடுமையான சேதமடைந்த நிலையில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
தென்பகுதியில் இருந்து யாழ் நோக்கி விளம்பர பதாதைகளை ஏற்றிச்சென்ற கப்வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
குறித்த முச்சக்கர வண்டியில் யாரும் இல்லாதமையால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் இரண்டும் கடுமையான சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”