புங்குடுதீவு உலகமையத்தினூடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்!! (படங்கள்)

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் புங்குடுதீவைச் சேர்ந்த திரு.திருமதி. இலட்சுமணன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருவாளர். தவச்செல்வம் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு, (25.12.2020 ) திரு.திருமதி.தவச்செல்வம் யமுனாதேவி மற்றும் அவர்களின் பிள்ளைகளினால் புங்குடுதீவில் இயங்கும் 10 பாடசாலைகளிலும் கல்வி கற்று வரும் சுமார் 850 வரையான அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை புங்குடுதீவு உலகமையத்தினூடாக கடந்த வாரம் வழங்கி சிறப்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வுகளில் புங்குடுதீவு உலக மையத்தின் செயலாளர் கருணாகரன் குணாளன் , பொருளாளர் சபா. பரமேஸ்வரன் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கையளித்திருந்தனர் .

நன்றி.
சபா பரமேஸ்வரன்.
பொருளாளர் ,
புங்குடுதீவு உலக மையம் ,
புங்குடுதீவு.


Comments (0)
Add Comment