நார்மலா இருக்க நார்சத்து அவசியம்!! (மருத்துவம்)

நார்ச்சத்து என்பது தாவரங்களில் உள்ள முக்கியமான சத்துப்பகுதி. இதை நமது செரிமான மண்டலத்தில் உள்ள என்சைம்களால் முழுமையாக உடைத்துச் செரிக்க முடியாது என்பதால் இவை உடலைவிட்டு முழுமையாக வெளியேறுகின்றன. இதனால், நார்ச்சத்து என்பது மனித உடலுக்கு இயற்கையான மலமிலக்கியாக செயல்படுகிறது. நமது செரிமான மண்டலம் மிகச் சிறப்பாகச் செயல்பட நார்ச்சத்து மிகவும் அவசியம். நார்ச்சத்து உடலில் சேரும்போது பிற உணவுக் கழிவுகளையும் வெளியேற்றிக் கொண்டுவந்துவிடுகிறது. மேலும் இதனை என்சைம்களால் உடைக்க முடியாது என்பதால் இதற்கு கலோரி என்னும் ஆற்றல் விகிதமும் இல்லை.

இதனால் உடலில் ஆற்றல் அல்லது சர்க்கரை சேராது. அதேசமயம் வயிற்றில் நிறைவதால் பசியுணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால், நார்ச்சத்து இயற்கையான டயட் கண்ட்ரோல் ஏஜென்ட்டாக உள்ளது. நார்ச்சத்து உள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளும்போது மலச்சிக்கல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குணமாகின்றன. நார்ச்சத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து என இருவகை உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்து என்பது குடலில் உள்ள வாயுக்களால் உடனடியாக நொதித்துவிடக்கூடியது. இவை, குறுவளைய கொழுப்பு அமிலங்கள் எனும் உடலியக்க துணை பொருட்களால் இந்த நொதித்தலை அடைகின்றன.

நம் குடலில் உள்ள பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிர்களே இந்த கொழுப்பு அமிலங்களை வெளியிடுகின்றன. இது மிகுந்த இழைதன்மை கொண்டது. ப்ரீபயாடிக் ஃபைபர் என்பார்கள். இந்த நார்ச்சத்துகள் வாயுக்கள் உடலில் குறைவதைக் கட்டுப்படுத்துவதாலேயே நமக்கு வயிறு நிறைந்த உணர்வு உருவாகிறது. நீரில் கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள என்சைம்களால் கரைக்கவோ உடைக்கவோ இயலாமல் சேகரிக்கப்படுகிறது. சிலவகை ஸ்டார்ச்சுகள் பெருங்குடலில் நொதிக்கின்றன.

Comments (0)
Add Comment