கொவிட் தடுப்பூசி: இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அரசாங்கம்!!

கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கும் தடுப்பூசிகள் பற்றி அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

எஸ்ட்ரா செனக்கா கொவிஷி என்ற ஐம்பது லட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலங்கைக்கு வழங்க விருக்கிறது. தடுப்பூசியை தருவிப்பது பற்றி நியமிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க தலைமையிலான குழு இது தொடர்பாக தொடர்ந்தும் பணியாற்றவிருக்கிறது. சுகாதாரத்துறையினர்க்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் முதற்கட்டமாக இந்த தடுப்பூசி ஏற்றப்படவிருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment