புதிய முதன்மை பதவி நிலை அதிகாரிகளுடன் இராணுவ தளபதி சந்திப்பு!!

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியும், கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ தலைமையகத்தின் முதன்மை பதவி நிலை அதிகாரிகளை புத்தாண்டில் முதன் முறையாக நேற்று (25) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது தலைமையகத்தின் முன்னேற்றம் பற்றியும் நாட்டின் மிகப்பெரிய மனித வள நிறுவனமாக கட்டமைப்பது தொடர்பிலும் இராணுவ தளபதி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.

புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘இராணுவத்தின் ஐந்தாண்டு திட்டம் 2020 – 2025 பயிற்சிகள், தேசத்தை கட்டியெழுப்பு பணிகளில் பாதுகாப்பு படைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற பல விடயங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

இராணுவத் தளபதி குறித்த முதன்மை பதவி நிலை அதிகாரிகளின் முன்மொழிவுகளையும் அவதானிப்புகளையும் கலந்துரையாடலின் பின்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் எதிர்கால மேம்பாட்டிற்கான அணுகுமுறைகளுக்கான பங்களிப்பையும் கோரினார்.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல, தொண்டர் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க, உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Comments (0)
Add Comment