யாழ்.மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதிடு வெற்றி!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர சபையின் 2ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 26 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களிக்க, 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அத்தோடு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுயினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உளுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த யாழ்.மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் முதல்வர் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்ப்பாணம் மாநகர சபை பாதீடு 23 மேலதிக வாக்குகளல் நிறைவேற்றப்பட்டது!!

Comments (0)
Add Comment