காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!! (படங்கள்)

முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் காளி வெங்கட் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வரும் சாய்பல்லவி இப்பொழுது விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் நடித்து வர தமிழில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் காமெடி நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக ஒரு சிலதகவல் சமூக வலைத்தளங்களின் மூலம் கசிந்து வைரலாகி வருகிறது.

தாம் தூம்

மிகச்சிறந்த நடிகைக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ஏற்கனவே தமிழில் தாம் தூம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தலையை காட்டி சென்ற இவருக்கு பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாகி இப்போது பல திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.

விராட பருவம்,

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடிய சாய்பல்லவிக்கு தமிழை விடவும் தெலுங்கில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருவதால் அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் இப்பொழுது ராணாவுடன் இணைந்து விராட பருவம், நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிப்பை அள்ளித்தந்து

மற்ற நடிகைகளைப் போல அல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சாய் பல்லவி தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே திரைப்படத்தில் நடித்து வருகிறார். தியா,மாரி 2, என் ஜி கே மற்றும் சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் என தமிழில் மிகக்குறைவான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நிறைவான நடிப்பை அள்ளித் தந்து ரசிகர்களை திருப்தி அடைய வைத்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி

இந்நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி காமெடி நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்று முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதால், அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சாய்பல்லவி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்ற ஆச்சரியம் அனைவருக்குள்ளும் இருக்க விரைவில் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment