எச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி – அதிபர் ஜோ பைடன் உத்தரவு..!

அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும், வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை ஒபாமா ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.

இருப்பினும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இந்த தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்கி அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்கவாழ் இந்தியர்களின் குடும்பத்தினர், இனி எச்-4 விசா மூலம் வேலைக்கு செல்ல முடியும். பைடனின் அறிவிப்புக்கு சமூக வலை தளங்களில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்

Comments (0)
Add Comment