இந்தியா எந்த அழுத்தத்தினையும் கொடுக்கவில்லை- அஜித்கப்ரால்!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை இலாபம் தருவதாக மாற்றுவதில் இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர்தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செலவாணிகளை அதிகரிப்பதற்கும் இளைஞர்களிற்கான வேலைவாய்பினை அதிகரிப்பதற்கும் அனைத்து எதிர்கால அரசாங்கங்களும் வெளிநாட்டு முதலீட்டை வரவேற்க தயாராகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புவியியல் அமைவிடமும் இந்தியாவிற்கு அருகில் அமைந்திருப்பதும் இதற்கு காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆளும்கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment