யாழ். கரையோர நீர் உயிரினவாழ் விரிவாக்கல் காரியாலயத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கு !! (படங்கள்)
தேசிய உயிரினவாழ் அபிவிருத்தி அதிகாரசபையின் கரையோர நீர் உயிரினவாழ் விரிவாக்கல் காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களின் தலைமையில் பட்டதாரிப் பயிலுநர்களிற்கான கருத்தரங்கு இன்று (02.03.2021) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. ச.கி.நி. கமலராஜன், மன்னார் மாவட்ட நீர் உயிரினவாளர் சு.மதனராஜ் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் திரு.க. மகேசன் அவர்கள் பட்டதாரி பயிலுநர்கள் சிறப்பான முறையில் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டதுடனா அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் பட்டதாரி பயிலுநர்களுக்கு கரையோர நீர் உயிரினவாழ் விரிவாக்கல் காரியாலய செயற்பாடுகள் தொடர்பான அடிப்படையான முக்கிய விடயங்கள் மற்றும் குறித்த காரியாலய செயற்பாடுகளை முன்னெடுக்க பயிலுநர்கள் எவ்றான செயற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வளவாளர் B.நிருபராஜ் (உதவிப் பணிப்பாளர் வட மாகாணம். கரையோர நீர்வாழ் உயிரின செய்கை) குறிப்பிட்டார் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”