பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!!

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் உள்ள தற்போதைய சட்ட முறைமை, மற்றும் நீதி முறைமையை மிகவும் திறமையானதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தை தடுக்கும் வகையிலும் தீவிர மாற்றத்தை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒரு வழக்கை நிறைவு செய்ய அதிகபட்ச காலம் மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்

நேற்று (19) ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றின் போதே அவர் இதனை ​தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்ட மா அதிபருக்கு நேரடியாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்கு மூன்று நீதிபதிகள் மூலம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் 8 வருடங்கள் வரை தாமதமடைந்த வழக்குகளை புதிய சட்டத்தின் மூலம் 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், ஒரு வழக்கை நிறைவு செய்ய அதிகபட்ச காலம் மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சபையின் தேர்தல் 23 மற்றும் 24ம் திகதிகளில்

நடைபெறவுள்ள உள்ளூராட் சபைத் தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இன்று சனிக்கிழமை(20) இடம்மபெற்றது.

சிறுவர் மகளிர் விவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், யாழ். கந்தர்மடம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (20) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தலைமை வேட்பாளரான விக்னேஸவரனிடம் வழங்கி வெளியிட்டு வைத்ததுடன், ஏனைய வேட்பாளர்ககை்கும் வழங்கி வைத்தார்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுகின்ற கட்சியே ஐதேக

ஐக்கிய தேசிய கட்சியானது நாட்டில் இன மத பேதங்களை கடந்து சமூகத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுகின்ற கட்சியென அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காக கொண்ட தேர்தலாக இது காணப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எமது கட்சியானது கடந்த 1946ஆம் ஆண்டு உருவாக்கப்படும் போது நாட்டில் சிறுபான்மை உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்பட்ட கட்சியாகும். அந்த வகையில் தற்போதும் இவ் உள்ளூராட்சி தேர்தலிலும் சமூகத்திலும் அனைத்து மட்டத்திலும் உள்ள மக்களையும் ஒன்றிணைத்து உள்வாங்கியே வேட்பாளர்களை நியமித்துள்ளோம்.

கடந்த காலத்தில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவற்றிற்கு வாக்களித்ததன் ஊடாக எதனை அவர்கள் செய்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆனால் நமது ஐக்கிய தேசிய கட்சியானது புதிய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்து மூன்று ஆண்டுகளில் எதனை செய்தது என்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

குறிப்பாக எமது கட்சியின் தலமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் நடைபெற்ற முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய் கீதம் பாடப்பட்டது. அது தற்போது வடக்கு கிழக்கு முழுவதும் தமிழில் இசைக்கப்படுகிறது என்று கூறினார்.

Comments (0)
Add Comment