தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் நீங்கப் போவதாக, சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் பணித்திருந்த நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய அந்த அதிபர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.
இந்தநிலையிலேயே, குறித்த அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
வறட்சியால் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு..!!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து 57,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி ஜெயரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிலும் அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, குறித்த மாவட்டங்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரவி ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிணைமுறி மீதான விவாதம் : கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை..!!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம் குறித்து தீர்மானிக்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை 22 ஆம் திகதி கூடுகின்றது.
இதற்கும் மேலதிகமாக எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தின் போது பாராளுமன்ற நிலையியற் கட்டளை மறு சீரமைக்கும் சட்ட மூலம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கநெறிக்கோவை தொடர்பான சட்ட மூலத்தின் இறுதி விவாதம் ஆகியன இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகிறது.