சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் (Lee Hsien Loong) நாளை (22ம் திகதி) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வரும் அவர், 24ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.
அத்துடன், 23ம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று, மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர், சில உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிடோரையும் லீ ஷியன் லூங்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐதேக வேட்பாளரது பிரச்சாரங்களை தாங்கி லொரி மீட்பு – சாரதி கைது..!!
மன்னார் – முஸலி பிரதேசசபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தொடர்பான பிரச்சாரங்களை காட்சிப்படுத்திய லொரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை புத்தளம் – வேப்பமடு பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், வேப்பமடு பகுதியைச் சேர்ந்த லொரியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சாரதி மற்றும் அவரது உதவியாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமுலுக்கு வருகிறது வாகனங்களுக்கான புதிய சட்டம்..!!
பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்புக்கான அம்சமாக காணப்படும் ஆசனபட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சு இவ் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறித்த யோசனை, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவிருந்த நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த யோசனை பிற்போடப்பட்டது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், சாரதி மற்றும் முன் ஆசனத்தில் பயணிப்பவருக்கான பாதுகாப்பு பலூன், பூட்டுவதை தடுக்கும் பிறேக் தொகுதி (Anti -– Locking Breaking System (ABS)) மற்றும் முற்புற, பிற்புற ஆசனங்களில் பயணிப்போருக்கான மூன்று இடங்களில் இணைக்கப்படும் ஆசன பட்டி (Three Point Seat Belt) காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளை மீறுகின்ற வாகனங்கள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள், உரிய நிறுவனங்களால் எதிர்வரும் நாட் களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி..!!
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகள் தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாக இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக் கையளித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாத ஒருவர் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பங்களை தமது பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரி ஒப்புதல் அளிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.