பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!!

ரணில் வசமுள்ள முகாமைத்துவம் மைத்திரி வசமாகுமா.?..!!

தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வசமுள்ள பொருளாதார முகாமைத்துவத்தை தான் எடுக்க போவதாக ஜனாதிபதி பொதுக் கூட்டமொன்றில் கூறியுள்ளார். எனினும் இவ்வாறான கருத்துகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.

ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் அவ்வாறு பேசுவதற்கும் செயற்படுவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண உரிமை உள்ளது. என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவு பெறும் வரை எமது கட்சியினர் பொறுமையாக இருக்க வேண்டும். அதன்பின்னர் நடப்ப‍தனை பார்ப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி வசமுள்ள பொருளாதார முகாமைத்துவத்தை தாம் இவ்வருடம் முதல் தம்வசம் வைத்துக்கொள்ள போவதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பிலும் சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் முக்கிய நகர்வுகள்.!!!

ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சில முக்கிய நகர்வுகளை கையாள இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது. தேர்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டமாக காணமல்போனோர் சட்டமூலம், பயங்கரவாத திருத்த சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த வாரம் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் சிவில் அமைப்புகளும், மனித உரிமைகள் குறித்து செயற்பட்டுவரும் நிறுவன தலைவர்கள் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளும் நகர்வுகள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் சில முக்கிய வேலைத்திட்டங்களை கையாளும் வகையிலும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டம் மீறல்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு விடுதலை..!!

புதிய காத்தான்குடியில், தேர்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர், நேற்று (20) கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த நபரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சிறிய ஒலிபெருக்கியில் ஓர் அரசியல் கட்சி சார்பாக வீதி விளம்பரம் செய்தமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்தத் தகவலையடுத்து,ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவரைக் கைதுசெய்தனர்.

பின்னர் குறித்த நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒருவர் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Comments (0)
Add Comment