“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.01.2018)

ஆர்ப்பாட்டத்தால் வீதிக்கு பூட்டு

வேலையில்லாப் பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, கொழும்பு – லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வு வழங்காமையாலேயே, இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விகா­ரையின் பெயரில் நிதி சேக­ரிப்பு : மக்களே அவதானம்

எம்­பி­லி­பிட்­டிய செவ­ன­கல கிரி இப்பன் ஆர பகு­தியில் நிதி சேக­ரித்துக்கொண்­டி­ருந்த நால்­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

பெளத்த விகா­ரை­யொன்றின் நிர்­மாணப் பணி­க­ளுக்­காக நிதி சேக­ரித்துக் கொண்­டி­ருந்த போதே இவர்கள் நால்­வரும் நேற்று முன்­தினம் கைது செய்யப்­பட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட தக­வ­லை­ய­டுத்தே குறித்த நால்­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் நால்­வரும் திஸ்­ஸ­ம­கா­ராம பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் என விசா­ர­ணைகளிலி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

இன்று சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மாலை 04.30 தொடக்கம் 05.30 வரை, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க முதல் அதிவேக வீதி வரையான பேஸ்லைன் வீதி, பொரள்ளை டி.எஸ் சுற்றுவட்டம், ஹோட்டன் பிரதேசம், தாமரைத் தடாகம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி வரையான பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்­பீட்டு பணிகள் ஆரம்பம்.!

கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரப் பரீட்­சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்­பீட்­டுப்­பணி எதிர்­வரும் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­டைத்தாள் மதிப்­பீட்­டுப்­பணி நாடு முழு­வதும் ஒதுக்­கப்­பட்ட மதிப்­பீட்டு நிலை­யங்­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை நடை­பெற்­றது. இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணிக்­கான கடி­தங்கள் உரிய ஆசி­ரி­யர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்­பீட்டுப் பணியில் தமிழ் இலக்­கிய நயம், இரண்டாம் மொழி தமிழ், இரண்டாம் மொழி சிங்­களம் உள்­ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகளே நடைபெறவுள்ளன.

நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் -பிரதமர் ரணில்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக​ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை எமது நாட்டிற்குள் ஈர்ப்பது என்றால் நாட்டில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று பிரதமர் கூறினார்.

புத்தளம், பொதுவடவன மகா விஹாராயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment