“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (23.01.2018)


தமிழ்மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்

அன்னப்பறவைகள் போன்று எமது தமிழ் மக்களும் வேட்பாளர்களை முறையாக தெரிவு செய்வார்கள் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

எம்மை விட்டு விலகிப்போகுமாறு கூறுகின்றவர்கள் தாம் என்ன செய்யப்போகின்றோம் எனவும், தம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் கூறவேண்டும் அதுவே ஆராக்கியமான விடயமாகும்.

அதனை விடுத்து கட்சியையும், கட்சியின் உறுப்பினர்களையும் விமர்சிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அவசியமற்ற விடயங்களைப் பேசி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம்.

எங்களது கட்சி இதுவரையிலும் மக்களை ஏமாற்றி செயற்பட்டது கிடையாது எனவே தற்போதைய சூழலில் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிணைமுறி அறிக்கை பிரதி

மத்திய வங்கி பிணைமுறி மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை சமூகமயப்படுத்தக் கூடாதென்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத்தியவங்கி பிணைமுறி அறிக்கை மற்றும் பாரதூரமான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அரச வளங்கள் சிறப்புரிமைகள் அதிகாரம் முதலானவற்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக்கொண்டது தொடர்பான விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தி உரையாற்றுகையிலேயே அவர்; இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர் பெரும் எண்ணிக்கைகளை கொண்டுள்ள பக்கங்களாக இது அமைந்துள்ளது.

இவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதனை இருவெட்டு மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூகத்தின் முன்னெடுப்பதும் பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்hகக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன்போது விபரித்தார்.

உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவிக்க வேண்டாம் – சபாநாயகர்

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய,

மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பாக விடயங்களை கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை உரியமுறையில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Comments (0)
Add Comment