“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (24.01.2018)

பெப்ரவரியில் பாராளுமன்றில் முக்கிய விவாதம்..!!

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவராக சல்மான் நியமனம்..!!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் இன்று தனது பதவியை இராஜினாமா செய்தபின்னர், ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று பிற்பகல் கையொப்பமிட்டமை கறிப்பிடத்தக்கது.

பதுளை தமிழ் அதிபர் விவகாரம் : ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு..!!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்கு மூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோரின் முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு நாளை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் ஆஜராகுமாறு, ஊவா மாகாண கல்விச் செயலஆளர் சந்தியா அம்பன்வெல உள்ளிட்டோருக்கு மனித உரிமைகள் ஆணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாகாண சபை ஊழியர்களான பாலித்த ஆரியவங்ச, பிரசன்ன பத்மசிரி, அமில கிரிஷாந்த ரத்நாயக்க ஆகியோருக்கே விசாரணைகளுக்கு ஆஜராக நோடிஸ் அனுப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழையும் வெளிநாட்டுப் படகுகளுக்கு தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா ?..!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு படகுகளுக்கு 60 இலட்சம் முதல் 17.5 கோடி ரூபா வரை தண்டபணம் அறிவிடவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் படகில் மீன்பிடி உபகரணங்கள் போன்றவற்றை வெளியில் வைத்திருந்தால் 40 இலட்சம் முதல் 15 கோடி வரை தண்டபணம் அறவிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கு மீனவர்கள் பிரச்சினைகள் இவ்வருட இறுதிக்குள் தீர்க்கப்படும்.

இதன்போது வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment