“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.01.2018)

ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. உள்­ளிட்டோர் விசா­ர­ணைக்கு அழைப்பு : இன்று ஆஜ­ராக மனித உரி­மைகள் ஆணைக்குழு அறி­வு­றுத்தல்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான வாக்குமூலத்தை வழங்க அச்­சு­றுத்­தி­யமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவும் விசேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. ஆசி­ரியர் சங்­கத்தின் செய­லாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் ஆகி­யோரின் முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

அதன்­படி இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்குழுவில் ஆஜ­ரா­கு­மாறு, ஊவா மாகாண கல்விச் செய­ல­ாளர் சந்­தியா அம்­பன்­வெல உள்­ளிட்­டோ­ருக்கு மனித உரி­மைகள் ஆணைக்குழு அறிவித்தல் அனுப்­பி­யுள்­ளது. ஊவா மாகாண கல்விச் செய­ல­ாளர் சந்­தியா அம்­பன்­வெல, மாகாண கல்விப் பணிப்­பாளர் ரத்­நா­யக்க, வலய கல்விப் பணிப்­பாளர் ரண­சிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, மாகாண சபை ஊழி­யர்­க­ளான பாலித்த ஆரி­ய­வங்ச, பிர­சன்ன பத்­ம­சிறி, அமில கிரி­ஷாந்த ரத்­நா­யக்க ஆகி­யோ­ருக்கே விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ராக அறிவித்தல் அனுப்பப்­பட்­டுள்­ளது.

எச்.ஆர்.சி./236/18 எனும் முறைப்­பாட்டு இலக்­கத்­துக்கு அமை­வாக இந்த அறிவித்தல் அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ள­தாக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்குழுவின் உயர் அதி­காரி யொருவர் தெரி­வித்தார்.

விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்பட்ட மேற்­படி நபர்­க­ளுக்கு மேல­தி­க­மாக முறைப்­பாட்­டா­ளர்­க­ளான ஜோஸப் ஸ்டாலின் மற்றும் கீர்த்தி தென்­னகோன் பாதிக்­கப்பட்ட அதிபர் ஆர். பவா­னிக்கும் இன்று மனித உரி­மைகள் ஆணைக்குழு­வுக்கு வருகை தரு­மாறு அழைப்பு விடுக்­கப்பட்­டுள்­ளது.

அதிபர் ஆர். பவா­னியை பாதிக்­கப்பட்ட தர­ப்பாக கருதி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. மனித உரி­மைகள் ஆணைக்குழுவில் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பா­டு­களில், ஊவா முத­ல­மைச்­சரும் மேலே பெய­ரி­டப்­பட்ட ஊவா கல்விச் செயலர் உள்­ளிட்­டோரும் செய்த செயல் கார­ண­மாக அர­சி­ய­ல­மைப்பின் 12(1) ஆவது அத்­தி­யாயம் மற்றும் 13 ஆம் அத்­தி­யாயம் ஊடாக உறுதி செய்­யப்பட்­டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமை, 10 ஆவது அத்தியாயம் ஊடாக உறுதி செய் யப்படும் மன அமைதி ஆகியன கடுமை யாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுக்­க­டையில் இன்று ஜனா­தி­பதி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் கொழும்பு மாநகரசபைக்கு, எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு திரட்டும் முக­மாக, கொழும்பு – புதுக்­கடை சந்­தியில் இன்று மாலை 6 மணிக்கு, மா பெரும் தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

ஸ்ரீல.சு.க. மத்­திய கொழும்பு பிர­தான அமைப்­பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் இக்­கூட்­டத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு மத்­திய கொழும்பு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.

சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவிகள்

கால தாமதமாகின்ற சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

1929 என்ற இலங்கை சிறுவர் தொடர்பாடல் ​ சேவையை தொடர்பு கொள்வதன் மூலமாக எந்தவொரு நபருக்கும் சட்ட உதவி பெற்றுக்கொள்ள முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறார் துஷ்பிரயோக வழக்குகள் கால தாமதமாகுவது தற்போதைய சூழ்நிலையில், முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினையாக மாறியுள்ளது.

அதற்கான உடனடி பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

அதன் முதல் கட்டமாக, இவ்வாறு கால தாமதமாகின்ற சிறார் துஷ்பிரயோக வழக்களுக்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் சட்ட உதவிகளை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை; மூன்று உறுப்பினர்களுக்கு காயம்

ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஊவா மாகாண சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர் தற்போது பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 8 புதுக்கோட்டை மீனவர்கள் கைது.

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டு இந்திய மீனவர்கள் நேற்றிரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த எட்டு மீனவர்களும் இரண்டு விசைப்படகுகளுடனும் சட்ட விரோதமாக பிடித்த மீன்கள் மற்றும் மீன் பிடிக்கு பயன்படுத்திய வலைகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் மீனவர்கள் இன்று யாழ். மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைப்பகுதி குறித்த புதிய வரைபடம்

புதிய தகவல்களை உள்ளடக்கி இலங்கையின் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தொடர்பான கிராமங்களின் அட்டவணையை தயாரிப்பதற்கு அரச நிலஅளவையாளர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த காலப்பகுதியில் கிராமம் நகரம் மற்றும் வீதிகள் பல புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்கத்தினால் வர்த்தகமானியின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களின் பெயர் பூகோளரீதியிலான அறிகுறிகள் குறித்த குறியீடுகள் கொண்டதாக புதிய கிராம உத்தியோகத்தர் பெயர்ப்பட்டியில் அட்டவணை தயாரிக்கப்படுவதாக அரசாங்க நில அளவையாளர் நாயகம் பிஎம்பி உதயகாந்த எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த பணியில் பிரதேச செயலாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

முதலில் இந்த தகவல்களை உள்ளடக்கியதாக டிஜிட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து இது குறித்து பொதுமக்களின் கருத்துக்களும் கேட்டுக்கொள்ளப்படும் என்று நிலஅளவையாளரின் நாயகம் தெரிவித்தார்.

புதிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கப்படும் கிராமங்களின் பெயர் திணைக்களத்தினால் தயாரிக்கப்படும் ஏனைய வரைபடங்களுக்காக பயன்படுத்தமுடியும்.

இறுதி வரைபடம் தயாரிக்கப்பட்டு நிலஅளவையாளர் திணைக்களத்தில் சேர்க்கப்படுவதுடன் பின்னர் அதனை அச்சிட்டு பகிரங்கப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நில அளவையாளர் நாயகம் மேலும் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment