பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (25.01.2018)

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களால் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி அடையாள வேலை நிறுத்தப் போரட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர் கல்வி அசை்சுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க கூட்டு குழுவின் ஊடகப் பேச்சாளர் கே்.எல்.டீ.பி ரிச்மண்ட் கூறினார்.

நுகேகொட ஹய்லெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட வரையிலான ஹய்லெவல் வீதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடியில் 24 வெற்றுக்காணிகள் சுவீகரிப்பு

காத்தான்குடியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு காரணமாக இருந்த துப்பரவு செய்யப்படாத 24 வெற்றுக்காணிகளை, காத்தான்குடி நகர சபை சுவீகரித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபை மற்றும் காததான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம் ஆகிய அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட டெங்கு பரிசோதனையின் போதே, இந்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளுக்கு, காத்தான்குடி நகர சபையால் சுவீகரிக்கப்பட்ட காணி என்ற விளம்பரப் பலகை போடப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளை, காணிச் சொந்தக் காரர்கள் 14 நாட்களுக்கு துப்பரவு செய்து மீண்டும் நகர சபைக்கு அறிவிக்கும் பட்சத்தில் அதிகாரிகள் அந்தக் காணியை பரிசோதனை செய்த பின்னர் காணியை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, காத்தான்குடி நகர சபை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

14 நாட்கள் கடந்து காணி துப்பரவு செய்யப்படாவிடின் காணியை முழுமையாக நகர சபை சுவீகரிப்பதுடன், நீதிமன்றத்தின் ஊடாக காணிச் சொந்தக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டிய சந்தியில் இருந்து காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டிய சந்தியில் இருந்து காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை கூறத்தக்கது.

Comments (0)
Add Comment