பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.01.2018)

குடியுரிமையை பரித்தாலும் அரசியல் பணிகள் தொடரும்

குடியுரிமையை இல்லாதொழித்தாலும் மக்களுக்காக முன்நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.தமது குடியுரிமையை நீக்குவதற்கு எத்த அவ்வாறு குடியுரிமையை பரித்தாலும் தமது அரசியல் பணிகள் தொடரும் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழு அறிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக கூறுகின்றனர்.

இதுவும் மோசடிகளை மூடி மறைப்பதற்கான முயற்சி எனவும், 8 ஆம் திகதி விவாதம் இடம்பெற்றாலும், தேர்தல் பிரச்சார விதிமுறைகளுக்கு அமைவாக பத்தாம் திகதி வரை, அது குறித்த தகவல்கள் வெளிவராதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு அட்டைகள் இன்றைய தினம் விநியோகம்

தேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 3 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த முறை தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதேவேளை, பட்டியலில் உள்ளவர்களை தவிர்ந்த யாரும் உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, யாரேனும் ஒரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவி விலகினால், பட்டியலில் உள்ள ஒருவரே அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதற்காகவே வேட்புமனுப் பட்டியலில் மேலதிகமாக 3 பேர் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வரு­டத்தில் பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1500 குற்­றச்­சாட்­டுக்கள்

பொலி­ஸா­ருக்கு எதி­ராக கடந்த ஒரு­வ­ருட காலப்­ப­கு­தியில் ஆயி­ரத்து நாநூற்று நாற்­பத்தி எட்டு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பொலிஸ் நிலை­யங்­களில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாமை, சட்­டத்தை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யமை, பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டமை, பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து கைது செய்­யப்­பட்­டமை, இலஞ்சம் பெற்­றமை போன்ற அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வாறு பொலி­ஸா­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த குற்­றச்­சாட்­டுக்­களில் 30தாக்­குதல் சம்­ப­வங்­களும் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரின் பாது­காப்பில் இருந்­த­போது இடம்­பெற்ற இரண்டு மரண சம்­ப­வங்­களும் அடங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பொலி­ஸா­ரினால் விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என 368 முறைப்­பா­டு­களும் சட்­டத்தை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 286 முறைப்­பா­டு­களும் பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டமை குறித்து 210 முறைப்­பா­டு­களும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் கைதுகள் குறித்து 71முறைப்­பா­டு­களும் மற்றும் இலஞ்சம் பெறல் உள்ளிட்ட ஊழல் மோசடிகள் குறித்து 10முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரோசி சேனநாயக்க வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபையின் ​ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரோசி சேனநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்​தை-கோகிலாபுர பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற திடீர் விபத்து காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் அவரது கால் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment