பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (28.01.2018)

தேயிலை, மிளகு மீள் ஏற்றுமதி நிறுத்தப்படும்

பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னர் தேயிலை மற்றும் மிளகு மீள் ஏற்றுமதி நிறுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தயாசிறிக்கு மேலும் நெருக்கடி : ரவி வெளியிட்ட மற்றுமொரு தகவல்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றது. எனினும் சுதந்திரக் கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டு வருகின்றனர். இதன் ஊடாக மக்களை திசைத்திருப்ப பார்க்கின்றனர் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் நிறுவனமே லொத்தர் சீட்டு அச்சிடும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தன. இதன்போது அதிக விலைக்கு லொத்தர் சீட்டு அச்சிடப்பட்டது. இதனை நிறுவனத்தை தடை செய்தேன். இந்த நிறுவனத்தினால் 2000 மில்லியன் நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்குளியில் இன்ற நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் பிற்போடப்படுமா.? தேர்தல்கள் ஆணைக்குழு.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை எதிர்வரும் 8ஆம் திகதி கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் அறிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியே இதனை தவறவிட்டார்.

பெப்ரவரி பத்தாம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு நாங்கள் தயார். ஜனாதிபதியே ஆரம்பத்தில் இதனை தவறவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எமக்கு அளிக்கும் வாக்குகள் மூலம் நாட்டில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக்க நடவடிக்கை எடுப்பாேம்.அதனால் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெற இருக்கும் தேர்தலில் நாங்கள் அடையும் வெற்றியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 96 பேரும் இணைந்து வந்தால் தனி அரசாங்கம் அமைக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment