பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (01.06.2018)

பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கையை வௌியிட ஆலோசனை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை வௌியிடுவதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்தோ சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தையொட்டி, “புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியொன்று அக்கரைப்பற்றில் இன்று (01) இடம்பெற்றது.

ஜும்மா தொழுகையை தொடர்ந்து, குறித்த விழிப்புணர்வுப் பேரணியானது, பட்டினப்பள்ளிவாயல் முன்னால் ஆரம்பமாகி, மாநகர சபை வரை சென்று மாநகர மேயா் அதாஉல்லா அகமட் ஸக்கியடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள், பீடி சிகரெட் உட்பட அனைத்து வகையான போதைப்பொருட்களையும் முற்றாக தடை செய்யவேண்டும் என, குறித்த மகஜரில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாவின் விற்பனை பெறுமதி இவ்வாறு பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். கடந்த மே 17 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி 159.55 என்ற வீழ்ச்சியை பதிவு செய்திருந்த அதேவேளை இன்றைய தினம் (01) ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நீரின்றி அவதியுறும் ஹிஜ்ரத் கிராம மக்கள்

அம்பாறை, பொத்துவில் ஹிஜ்ரத் நகர் கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீரின்றி பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பொத்துவில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இக் கிராமத்தில், சுமார் 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீரோ மற்றும் பாவனைக்கான நீரோ இல்லாமையின் காரணமாக இவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என, தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காக, பொத்துவில் பிரதேச சபையினால் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அவை பாவனைக்கு போதாதென, குறித்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதற்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. வாசித்துடன் தொடர்புக் கொண்டு வினவிய போது,

ஆலோசனை கேட்டார் செயலாளர்

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ​கையளித்திருந்த அறிக்கையை முழுமையாக வெளியிடுவது தொடர்பிலான ஆலோசனையை, ஜனாதிபதியின் செயலாளர் ஒகஸ்டின் பெர்ணான்டோ, சட்டமா அதிபரிடம் கேட்டுள்ளார்.

Comments (0)
Add Comment