பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.06.2018)

இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த நிதி உதவியின் அடுத்தகட்ட கடனுதவியான 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணம் எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் திருத்தியமைக்கப்படும் என பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் மல் ஶ்ரீ தி சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த விலை அதிகரிப்பு பெற்றோர்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையில் உடன்படும் விதத்தில் அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விமான நேர அட்டவணையில் மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வருகை தரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கின்றது.

இந்து சமுத்திர பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனையின் ஒன்றின் காரணமாகவே இவ்வாறு நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் இல்லை

அனைத்து அரசியல்வாதிகளையும் ஒரே விதத்தில் பார்ப்பது நியாயமற்ற செயல் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எல்லா அரசியல்வாதிகளையும் ஊழல்வாதிகளாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Comments (0)
Add Comment