பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.06.2018)

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் தனஞ்சய டி சில்வா

மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற உள்ள கிரிக்கட் போட்டி தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வா இன்று (03) மேற்கிந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தை கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனஞ்சய டி சில்வா குறித்த கிரிக்கட் தொடரில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

விமான நேர அட்டவணையில் மாற்றம்

இந்து சமுத்திர வான் பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள விமானப் பயணிங்களின் பரீட்சார்த்த நடவடிக்கை காரணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரையிறங்கும் விமான சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க யூ.எல்.318, யூ.எல்.319, யூ.எல்.306, யூ.எல்.307, யூ.எல்.402, யூ.எல்.403, யூ.எல்.314, யூ.எல்.302 ஆகிய விமான சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மேலதிக விபரங்களை ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் 1979 என்ற அவசர இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஶ்ரீலசுக வின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

தற்காலிக புதிய நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (03) கூடப்படவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இந்த கூட்டம் கூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது தற்காலிக நிர்வாக குழுவொன்றை நியமித்து கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று இடம்பெறவுள்ள விசேட மத்திய குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அகில இலங்கை செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழு என்பனவும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Comments (0)
Add Comment