பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (03.06.2018)

புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது

கரதியனாறு, எலிஸ்வேவ வன பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரதியனாறு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கொஸ்லந்த, மெரவக மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

பேருவளை பிரதேசத்தில் டிப்பர் வாக​னமொன்றும், மோட்டார் வாகனமொன்றும் மோதியதில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (03) காலை 8 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை சபுகொட விகாரைக்கருகில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து, விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் களுத்துறை – வடக்கு பொலிஸ் நிலையத்தில் பணிப்புரியும் 29 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் சுற்றிவளைப்பில் 900 கஞ்சாச் செடிகள் மீட்பு

கொஸ்லாந்தை வளஹருவ வனப் பகுதியில், இரகசியமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த கஞ்சா பயிர்ச்செய்கை நிலப்பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், சுமார் 7 அடி உயரம் வளர்ந்திருந்த 900 கஞ்சாச் செடிகளைக் கைப்பற்றியதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருரைக் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் (02) இரவு 7 மணியளவில் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

56 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாரென, கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகளில் சிறுபகுதியை நீதிமன்றில் சாட்சிக்காக வைத்துக்கொண்ட பொலிஸார், ஏனைய செடிகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் மாசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.தயாசிறியின் தலைமையில், இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழையினால், ஏற்பட்டிருந்த அசாதாரண காலநிலையை தொடர்ந்து, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை, 350 ‌ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment