பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (04.06.2018)

கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்..!!

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இந்த நிலையை எதிர்பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

விசேடமாக சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் 75 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரண்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருவாத்தோட்ட பொலிஸாரிற்கு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 வது திருத்தச் சட்டம் நாட்டை படுகுழியில் தள்ளும்

20 வது திருத்தச் சட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளும் ஒரு செயற்பாடாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

20 வது திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதாவாக சமர்ப்பிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

20 வது திருத்த சட்டத்தின் நோக்கம், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ரத்து செய்வது அல்ல, ஜனாதிபதி தேர்தலை ஒழிக்க வேண்டும் என்பதே, அதற்கு அரசாங்கம் நிலையற்றதாக இருக்க வேண்டும் மற்றும் நிர்வாகி பலவீனமாக இருக்க வேண்டும், தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே விமல் வீரவங்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஊழல்வாதிகளை கைது செய்யாதது தொடர்பில் பொன்சேகா கவலை

ஊழல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் கவலையடைவதாக வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஊழல்வாதிகளை கைது செய்யாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சரணடைந்த ஆளுநரின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த இருவரும் இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருவாத்தோட்ட பொலிஸாரிற்கு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment