பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (04.06.2018)

ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள தயாராகும் வேலையில்லா பட்டதாரிகள்..!!

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்குமாறு வற்புறுத்தி ஆசிரியர் பயிற்சி பரீட்சையில் சித்தயடைந்த வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.

மத்திய மாகாண சபைக்கு முன்னாள் நாளை (05) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஒருங்கிணைந்த வேலையில்லாத பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாரிய அளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையால் இலங்கைக்கு கொள்ளை இலாபம்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தைவிட, 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளைவிட, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், 707,924 பேர் வருகை தந்துள்ளனர். இது 17 சதவீத அதிகரிப்பை காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 433 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாக கிடைக்குமென எதிர்பார்த்த நிலையில், 1,313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபமாக கிடைத்துள்ளது.

வாகன பற்றரிகளை திருடிய குழுவில் ஒருவர் கைது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் பற்றரிகளை, திருடிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரில் ஒருவர், தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சில மாதங்களாக பொருளாதார மத்திய நிலையத்தின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி, சிறிய லொரிகள் ஆகியவற்றின் பற்றரிகளைத் திருடியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

’சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவே எனது கடமை’

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது குழப்பநிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹன லக்‌ஷ்மன் பியதாச கட்சியின் ஆரம்பகாலத்தில இருந்தே இந்த நிலைக்காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் (04) தமது கடமைகளை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து உயர் பீடம் வரை அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு பயணிப்பதற்காக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான பணியே தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி ரோஹன லக்‌ஷ்மன் பியதாச, அதுத் தொடர்பில் பதிலளிப்பதற்கு இன்னும் காலமிருப்பதாகத் தெரிவிததுள்ளார்.

Comments (0)
Add Comment