பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (05.06.2018)

C350 – C360 வரையான பாகங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டன

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று காலை இந்த அறிக்கையை சமர்பித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வௌியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது

தீர்வு இன்றேல் போராட்டம் வலுக்கும்

தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தது.

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு போராட்டம் நிறைவடைந்தாலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் எச்.கே. காரியவசம் கூறினார்.

வேலை நிறுத்தம் நடத்தப்பட்ட போதிலும் தபால் நடவடிக்கைகளுக்கு எவ்வித அழுத்தங்களும் ஏற்படவில்லை என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் சிறிய அளவிளான பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகள் இருவரினதும் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேவை ஏற்படின் என்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும்

தேவை ஏற்படின் தன்னால் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு பணம் வழங்க முடியும் என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

தான் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக எவரிடமும் பணம் வாங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கியதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை சபாநாயகர் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அர்ஜுன் ஆலோசியஸிடம் இருந்து பணம் பெறவில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment