பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.06.2018)

முழு அறிக்கையும் கிடைத்த பின்னர் சமர்பிக்கப்படும்

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவினால் இன்று காலை சமர்பிக்கப்பட்டது.

உயிரிழப்புக்கள் 20 ஆக உயர்வு

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 14 குழந்தைகளும், 6 வயதானவர்களும் உள்ளடங்குவதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஜீ.வியேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் 350 க்கும் அதிகமான நோயாளர்கள் தென் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக, அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 இராணுவ வீரர்கள் கைது

வட்டுவ பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கு சொகுசு வீடொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த 12 இராணுவ வீரர்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து அண்மையில் ஓய்வுப்பெற்றிருந்த இராணுவ உயர் அதிகாரியொருவரே, இராணுவ செயற்திட்டமென தெரிவித்து குறித்த சொகுசு வீட்டினை நிர்மாணிக்க இராணுவ வீரர்களை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு ​செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ​இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரையில் குறித்த சொகுசு வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் இராஜினாமாச் செய்துவிட்டார்: கரு

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால, பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டார் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.

நாடாளுமன்ற நுழைவாயில் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்துக்கு நுழையும் வீதியை மறித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால், அவ்வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தினால் அந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெலவத்த சந்தியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment