பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.06.2018)

இலங்கை பாதுகாக்க அமைப்பின் சுற்றுச்சூழல் மாநாடு

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “இலங்கை பாதுகாக்க” தேசிய அமைப்பினால் சுற்றுச்சூழல் மாநாடு நேற்று மாலை கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை பாதுகாக்க தேசிய அமைப்பினால் நடைபவனி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

நேற்று பிற்பகல் 02.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவை வந்தடைந்ததும் மாநாடு நடத்தப்பட்டது.

இதன்போது சூழலியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை கூறத்தக்கது.

பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் 12ம் திகதி முதல் வேலைநிறுத்தம்
.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த திங்கட்கிழமைக்குள் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் கூறினார்.

இதன் காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

விபத்தில் 12 பேர் காயம்

ஹம்பரன – தம்புள்ளை வீதியில் ஹிரிவடுன்ன பிரதேசத்தில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 12 காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காய​மடைந்த 12 பேரையும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர், சர்வதேச கிரிக்கட் பேரவை தலைவர் சந்திப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷசாங் மனோகரை சந்திக்கவுள்ளார்.

டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின்போது மைதானத்தை மாற்றியமைப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக இலங்கையின் கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகப்பணிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சருடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்

Comments (0)
Add Comment