பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (07.06.2018)

இலங்கையின் வரி வருமானம் கடந்த ஆண்டில் 602 பில்லியன் ரூபா..!!

இலங்கையின் வரி வருமானம் இந்த ஆண்டு 792 பில்லியன் ரூபாவாக இருக்கும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் கடந்த ஆண்டில் 602 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று..!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக, புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித்த பின்னர் நடைபெறவுள்ள முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இதுவாகும்.

இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்..!!

மகரகம நகர சபைக்கு மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் சிலர் இன்று (07) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

காந்தி கொடிக்கார மற்றும் 5 உறுப்பினர்கள் இவ்வாறு புதிய உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 பேர் பதவி விலகியதை அடுத்து புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகரகம நகர சபையில் பதற்றம்..!!

மகரகம நகர சபைக்கு காந்தி கொடிக்கார மற்றும் 5 உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியளார் தெரிவிக்கின்றார்.

Comments (0)
Add Comment